இந்தியர்களின் பாரம்பரிய பழக்கமான சேமிப்பு அஞ்சறை பெட்டிகளில் ஒருகாலத்தில் தொடங்கியது... ஆனால் கடன் வாங்கியாவது அப்போதைய சந்தோஷத்தை அனுபவிப்பது இன்றைய நாட்களில் பெருகிவரும் பழக்கமாக மாறியுள்ளது. அந்தவகையில், இந்தியர்கள் எதற்கெல்லாம் கடன் வாங்குகின்றனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை CRIF வெளியிட்டுள்ளது.
கடன் மேலாண்மை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான CRIF வெளியிட்டுள்ள தகவலில், இந்தியர்கள் வீட்டுக்கடன் வாங்கவே அதிக முன்னுரிமை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் பெற்று திரும்ப செலுத்தி வருவதில் 40.1 சதவிகிதம் நிலுவையில் உள்ளதாகவும், தனிநபர் கடனில் 14.9 சதவிகிதம் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தங்க நகைக்கடன் வகையில் 10.6 சதவிகிதமும், வாகனக்கடன் வகையில் 7.9 சதவிகிதமும், கிரெடிட் கார்டில் 3.8 சதவிகிதமும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனக் கடனில் 1.6 சதவிகிதமும், நுகர்பொருட்கள் வாங்க பெற்ற கடனில் 0.8 சதவிகிதமும் நிலுவையில் இருப்பதாக CRIF தெரிவித்துள்ளது.