கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 1,80,000 கோடி ரூபாய் மதிப்புக்கு மக்கள் பொருட்களை வாங்கியுள்ளனர். இது முந்தைய ஆண்டின் அக்டோபர் மாத கிரெடிட் கார்டு செலவு மதிப்பை காட்டிலும் 38.3 அதிகம். பண்டிகை சீசனே இந்தளவுக்கு கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்க காரணம் என வங்கித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அதன் மூலம் கடந்த மாதம் சராசரியாக 18,900 ரூபாய் செலவிட்டுள்ளதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இது முந்தைய செப்டம்பர் மாதத்தை விட 23.2 சதவீதம் அதிகம்.
அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலமாக 45,296 கோடி ரூபாயும்; எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மூலமாக 35,459 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் 21,076 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் பேங்க் பசார் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன