சீதாராம் யெச்சூரி pt web
இந்தியா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் காலமானார்.

PT WEB

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் காலமானார்.

நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக இருந்து வந்தது. டெல்லியில் உள்ள All India Institute Of Medical Sciences மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் சீதாராம் யெச்சூரி உயிரிழந்துவிட்டார் என்ற சோக செய்தி வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி. மாநிலங்களவை உறுப்பினராகவும், கட்சியின் தலைவராகவும் இருந்தவர். தற்போது அவர் உயிரிழந்துள்ள செய்தி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுமையுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தியாக உள்ளது.

முன்னதாக, தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த சீதாராம் யெச்சூரியின் உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது. பின் மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, அதிலிருந்து மீளாமலேயே தற்போது உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சீதாராம் யெச்சூரி, 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆந்திரா, டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் எம்.ஏ. முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின்போது கைதானார்.

யார் இந்த சீதாராம் யெச்சூரி!

1974ல் மாணவர் கூட்டமைப்பில் இணைந்த யெச்சூரில் 1975ல் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் ப்யூரோ என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2015ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு முதல் மறையும் வரை தொடர்ந்து 3முறை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தார் யெச்சூரி. 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2021ஆம் ஆண்டு சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஸ் யெச்சூரி(34) கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.