இந்தியா

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: அரசியல் பிரமுகர் மகனுக்கு தொடர்பா ?

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்: அரசியல் பிரமுகர் மகனுக்கு தொடர்பா ?

jagadeesh

கேரள தங்கக் கடத்தல் கும்பலுட‌ன் உள்ள தொடர்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சே‌ர்ந்த ‌மூத்த தலைவரின் மகனும், நடிகருமான பினீஷ் கொடியே‌ரியிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

கடந்த மாதம் 21-ஆம் தேதி பெங்களூருவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் கொச்சியை சேர்ந்த அனுப் அகமது, ரிஜேஷ் ரவீந்திரன், சின்னத்திரை நடிகை அனிகா தினேஷ் ஆகிய மூவரை கைது செய்தனர். அ‌வர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்க‌ளில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித்குமார், ரமீஸ் ஆகியோரது மொபைல் எண்கள் இருந்தன.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்‌ கொடியேரி பாலகிருஷ்ணனின் மகனும் நடிகருமான பினீஷ் கொடியேரியின் மொபைல் எண்ணும்‌ போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்தது தெரியவந்தது. மயக்கமருந்து விற்பனைக் கும்பல் தலைவன் அனுப் முகமதுவுக்‌கும், பினீஷ் கொடியேரிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது‌ உறுதி செய்யப்பட்டது.

பின்னர் கொச்சியில் வைத்து பினிஷ் கொடியேரியிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். மீண்டும் அடுத்தவாரம் அழைக்கும்போது விசாரணைக்கு வருமாறு கூறி அவரை அனுப்பி வைத்தனர்.