இந்தியா

கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் எனக்கூறி மாட்டு சிறுநீர் விற்றவர் கைது..!

கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் எனக்கூறி மாட்டு சிறுநீர் விற்றவர் கைது..!

webteam

கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் எனக்கூறி மாட்டு சிறுநீர் மற்றும் மாட்டுச்சாணத்தை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம் கூக்ளி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை சேக் மமுத் என்பவர், கொரோனாவில் இருந்து மாட்டின் சிறுநீர் மனிதனை பாதுகாக்கும் எனக் கூறி நாட்டு மாட்டின் சிறுநீரை 500 ரூபாய்க்கும், ஜெர்சி பசுவின் சிறுநீரை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளார். இதற்காக அவரது கடையின் முன்பு கூட்டம் அலைமோதியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சேக் மமுத் மீது ஐபிசி 295ஏ, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். இவை அனைத்தும் ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் ஆகும்.

 (டெல்லி நிகழ்ச்சியில் மாட்டு சிறுநீர்)

இதுகுறித்து சேக் மமுத் கூறுகையில், “கடந்த வாரம் அகில பாரதிய இந்து மகா சபா, மாட்டு சிறுநீரின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்த வீடியோவை பார்தேன். அதனால் ஈர்க்கப்பட்டேன்” எனத் தெரிவித்தார். “மாட்டு சிறுநீர் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய நோக்கம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்” எனத் சண்டன் நகர் காவல் ஆணையர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.