இந்தியா

பசுவை சேவித்து கைதிகள் பாவத்தை கழியுங்கள்: ஹரியானா முதல்வர் ஐடியா!

பசுவை சேவித்து கைதிகள் பாவத்தை கழியுங்கள்: ஹரியானா முதல்வர் ஐடியா!

webteam

சிறைக்கைதிகள் பசுக்களுக்கு சேவை செய்து பாவத்தை கழிக்கலாம் என ஹரியானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறைகளில் பசுக்களை வளர்ப்பதற்கென பிரத்யேக இடத்தை ஒதுக்க அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் விரைவில் ஹரியானாவின் அனைத்து சிறைளிலும் பசுக்கூடம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் இந்த திடீர் அறிவிப்பு என செய்தியாளர்கள் அவரிடம் கேட்க, பசு வளர்ப்பை ஊக்கிவிக்கும் வகையில் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும், இதர பாஜக ஆளும் மாநிலங்களிலும் கோசாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 

அத்துடன் சிறைச்சாலைகளில் கோசாலை அமைப்பதால் கைதிகள் பசுக்களுக்கு சேவை செய்யும் நிலை ஏற்படும் என்றும், அதன்மூலம் அவர்களது பாவங்களை கழிக்க முடியும் என்றும் தெரிவித்தார். சிறைச்சாலையில் கோசாலை அமைப்பது சாத்தியமா என இதுதொடர்பாக ஹரியானா மாநில பசு பாதுகாப்பு வாரிய தலைவர் ராம் மங்கலாவிடம் கேட்டபோது,

சிறைச்சாலைகளில் கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் நிலங்கள் உள்ளது என்றும், அவற்றை கைதிகளே பராமரித்து வருவதாகவும் கூறினார். எனவே கோசாலை அமைப்பதில் சிக்கல் இல்லை என்றும், அது வருமானத்தை பெருக்கும் என்றும் தெரிவித்தார்.