இந்தியா

தனியார் மையங்களிலும் இனி பூஸ்டர் டோஸ்: மத்திய அரசு தகவல்

தனியார் மையங்களிலும் இனி பூஸ்டர் டோஸ்: மத்திய அரசு தகவல்

நிவேதா ஜெகராஜா

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் மையங்களிலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியது. இதில் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி என்றும், பூஸ்டர் தடுப்பூசி என்றும் கொண்டு வரப்பட்டது. இதில் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசிகளை பெரும்பாலான மக்கள் செலுத்தி கொண்டனர்.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 9 மாதத்திற்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வந்தது. பூஸ்டர் டோஸை பொறுத்தவரை, அது இதுவரையில் அரசு மையங்களிலேயே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி அதை தனியார் மையத்திலும் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.