இந்தியா

தன்பாலின ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்!

தன்பாலின ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்!

webteam

சகோதரிகள் முறைகொண்ட இரு பெண்கள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வாரணாசியில் நடந்துள்ளது

உத்தரப்பிரதேசத்தில் சகோதரிகள் முறைகொண்ட உறவினர்களான இரு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களுக்கு எதிர்த்து பெண்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். தங்களது திருமண புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இதுவே வாரணாசியில் நடைபெறும் முதல் தன்பாலின திருமணம் எனவும் கூறப்படுகிறது.

உத்திரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் சிவன் கோவிலுக்கு வந்து அங்குள்ள புரோகிதரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். செய்வதறியாது தவித்த புரோகிதர் திருமணம் செய்துவைக்க மறுத்துள்ளார். ஆனால் கோவிலுக்குள்ளே அமர்ந்த பெண்கள் திருமணம் செய்துவைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 

பெண்களின் கோரிக்கை வெளியில் பரவ கோவிலில் கூட்டம் கூடியுள்ளது. ஒருவழியாக திருமணம் செய்துகொண்ட பெண்கள் பிரச்னை எழுவதற்குள் கோவிலை விட்டு சென்றுவிட்டதாக புரோகிதர் தெரிவித்துள்ளார்.தன்பாலின திருமணம் குறித்து கோவில் நிர்வாகத்திடமும், கோவில் புரோகிதரிடமும் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெண்களின் திருமணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.