தீவிபத்து ஏற்பட்ட பொழுதுபோக்கு மையம் pt web
இந்தியா

“27 உயிரிழப்புகளுக்கு மாநில அரசும் மாநகராட்சியுமே காரணம்” - குஜராத் நீதிமன்றம்

ராஜ்கோட் பொழுதுபோக்கு மையம் தீவிபத்து விவகாரத்தில் குஜாரத் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளது.

PT WEB

ராஜ்கோட் நகரில் நானா-மாவா என்ற இடத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது.

அதில், “தீ விபத்து நிகழ்ந்த விளையாட்டு மையம் இரண்டு ஆண்டுகளாக அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. இதனை கவனிக்க மாநில அரசுக்கும், ராஜ்கோட் மாநகராட்சிக்கும் நேரம் இல்லையா? அல்லது அதிகாரிகள் தூங்கி விட்டீர்களா?

27 பேரின் உயிரிழப்பிற்கு மாநில அரசும், ராஜ்கோட் மாநகராட்சியுமே காரணம். இதுபோன்று அரசு செயல்பட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்? வருங்காலங்களில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்” என கூறினர்.