Dowry Image by Wilfried Pohnke from Pixabay
இந்தியா

வரதட்சணை... யாருக்கு சொந்தம்..?

நீதிமன்றங்கள் பெரும்பாலும் பெண்ணுக்கு ஆதரவாகவே செயல்படும் . நீங்கள் குற்றவியல் நம்பிக்கை மோசடிக்காக ஐபிசி பிரிவு 406 இன் கீழ் சட்டப்பூர்வ புகாரை தாக்கல் செய்யலாம். மூன்றாண்டு சிறை , அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வாங்கி குடுக்கலாம் .

த. பிரபாகரன்

கேரளாவை சேர்ந்த ஒரு பெண் தன் கணவரிடம் இருந்து 2 லட்சம் பணம் & 89 பவுன் நகைகளை மீட்டு தரும்படி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த பெண்ணுக்கு சாதகமாக ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.   

இந்தியப் பெண்களுக்கு அவர்களின் திருமணத்திற்கு முன்பும் பின்பும் கிடைக்கும் சொத்துரிமை மீதான சுயாட்சியை உறுதிப்படுத்தும் வகையில்  அண்மையில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

வரதட்சணை என்றால் என்ன?

வரதட்சணை என்பது ஒரு பெண் திருமணத்திற்கு முன், திருமண சமயத்தில், பிரசவ காலத்தில், குழந்தைகளின் விசேஷ நிகச்சியின் போது அல்லது கைம்பெண்மை அடைந்த சமயத்தில் பெரும்பாலும் அவளது பெற்றோர், உறவினர்கள் அல்லது மாமியார் வீட்டார் ஆகியோரிடமிருந்து பெறும் பரிசுகள், பணம் அல்லது சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. 

"இது அவளது தனிப்பட்ட சொத்து என்று கருதப்படுகிறது, அவளுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை வழங்குவதாக கருதப்படுகிறது " என்று அக்கார்ட் ஜூரிஸ் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரர் அலாய் ரால்வி கூறுகிறார்.

வரதட்சணையில் என்னென்ன அடங்கும்?

பரிசு பொருட்கள், பரம்பரை சொத்து  & அதன் மூலம் வரும் வருமானம் மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வ வழிமுறைகள் மூலம் பெறப்பட்ட சொத்துகள் வரதட்சணையில் அடங்கும்.

பெண் வேலைக்கு சென்று சம்பாதித்தது, அல்லது கலை படைப்புகள் மூலம் வரும் வருமானமும் இதில் அடங்கும்.

மேலும் வரதட்சணை பொருளை விற்றோ & அடகு வைத்தோ  சொத்து வாங்கினால் & வருமானம் வரும் முதலீடு செய்தாலும் அதிலும் பெண்ணுக்கு பங்கு உண்டு .

வரதட்சணையை எவ்வாறு பாதுகாப்பது?

திருமணமான பெண்கள் பெறப்பட்ட அல்லது வாங்கிய வரதட்சணை பட்டியலை, இந்த சொத்துகள் தொடர்பான தகுந்த  ஆதாரங்களுடனும் பராமரிக்க வேண்டும்.  அவர்கள் தங்கள் வரதட்சணையை யார் கையாள்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் & நகை வாங்கிய ரசீது ஆகியவற்றை பத்திரப்படுத்தி ஆதாரமாக காட்டலாம் .

திருமணமான பெண்கள் தங்கள் பெயரில் வாங்கி கணக்கை தொடங்கி நகையை லாக்கரில் வைக்கலாம் . 

திருமணமான பெண்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகள் குறித்து தெரிந்து இருக்க வேண்டும் & ஏதாவது குழப்பம் இருந்தால் தகுந்த வழக்கறிஞரை நாடலாம்.

கணவரின் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள வேண்டியது

கணவரின் குடும்பத்தினரும் பொய்யான குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க அனைத்து பரிசுகளையும் ஆவணப்படுத்த வேண்டும்.

மனைவிக்கோ அல்லது மருமகளுக்கோ பரிசு பொருட்கள் வழங்கும் போது பில் & எடை ஆகியவற்றை குறித்து வைத்து கொள்ள வேண்டும்.

ஆணின்குடும்பத்தினர்தகுந்தமுன்னெச்சரிக்கையுடன்இல்லையெனில், ஒருவேலைதவறானமருமகளால்பிறகுவரதட்சணைகொடுமைக்குஆளாக  நேரிடலாம்

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நீதிமன்றங்கள் பெரும்பாலும் பெண்ணுக்கு ஆதரவாகவே செயல்படும் . வரதட்சணையானது உங்கள் கணவருடன் இணைந்த சொத்தாக மாறாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது யாரிடமாவது ஒப்படைக்கப்பட்டு திரும்பப் பெறப்படவில்லை என்றால், நீங்கள் குற்றவியல் நம்பிக்கை மோசடிக்காக ஐபிசி பிரிவு 406 இன் கீழ் சட்டப்பூர்வ புகாரை தாக்கல் செய்யலாம். மூன்றாண்டு சிறை , அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வாங்கி குடுக்கலாம் .

நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?

கணவன் மனைவியின் வரதட்சணை புகார் தவறானது என்று நிரூபிக்க வேண்டியிருக்கும். வரதட்சணை மீதான “உரிமையை நிரூபிக்கும் பொறுப்பு” பொதுவாக அதை உரிமை கோரும் பெண்ணிடமே இருக்கும்" என்று வழக்கறிஞர் பிரதிபா பங்களா கூறுகிறார்.