ஃபைசல் கான் ani
இந்தியா

’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ - முழக்கம் எழுப்பிய ம.பி. நபர்.. நீதிமன்றம் விதித்த விநோத நிபந்தனை!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதற்காக, அவருக்கு நீதிமன்றம் விநோத நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.

Prakash J

இந்தியாவில் வசிக்கும் சிலர், பாகிஸ்தான் ஆதரவு நிலைபாடு கொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் சில சமயங்களில் இருக்குமிடம் தெரியாமல் தன்னையுமறியாமல் பாகிஸ்தான் முழக்கங்களை எழுப்பிவிடுகின்றனர். இதனால் பிற இந்தியர்களால் அவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதுடன் தேசத் துரோக வழக்குகளும் பதியப்படுகின்றன. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம் எழுப்பியதற்காக, அவருக்கு நீதிமன்றம் விநோத நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர், கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, ”பாகிஸ்தான் ஜிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத்” என முழக்கம் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். மேலும், தவறை ஒப்புக் கொண்ட ஃபைசல் தரப்பு, நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற நீதிபதி பாலிவால் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: வயநாடு தொகுதி | நாளை வேட்புமனுத் தாக்கல்.. முதல்முறையாக தேர்தல் களம்.. யார் இந்த பிரியங்கா காந்தி?

அதன்படி, ”வழக்கு முடியும்வரை மாதத்தில் முதல் மற்றும் நான்காம் செவ்வாய்க்கிழமைகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி தேசியக் கொடிக்கு 21 முறை மரியாதை செலுத்தி, ‘ஜெய் மாதா கி ஜே’ என்று முழக்கமிட வேண்டும்” என நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிலையில், மாதத்தின் நான்காம் வாரத்தின் செவ்வாய்க்கிழமையான இன்று மிஷ்ரோத் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான ஃபைசல், 21 முறை தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி முழக்கமிட்டார். மேலும், இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கபடுகிறதா என்பதை போபால் காவல் ஆணையர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசியக் கொடிக்கு ஃபைசல் மரியாதை செலுத்திய காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபைசல், “நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். தேசியக் கொடியை மதிக்கிறேன். மேலும், ​​தேச விரோத முழக்கங்களை எழுப்பவோ, தேசியக் கொடியை அவமதிக்கவோ வேண்டாம் என்று எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இனி, என் வாழ்நாளில் இந்த தவறை செய்ய மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ரூ.26 லட்சம் மதிப்புள்ள பை| ஹமாஸ் தலைவர் யாஹியாவின் இறுதிநிமிட காட்சிகள்.. வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்!