இந்தியா

அநாகரிக காதலர்களை சிறையில் போடுங்கள்: பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ்

அநாகரிக காதலர்களை சிறையில் போடுங்கள்: பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ்

webteam

பொதுவெளியில் கட்டிப்பிடித்து காதலை வெளிப்படுத்தும் ஜோடிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மகராஜ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மகராஜ், இரு சக்கர வாகனம், கார், பூங்கா ஆகிய இடங்களில் காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்தவாறு ஒருவரை ஒருவர் விழுங்குவது போல் பார்த்துக் கொள்கின்றனர். ஏதேனும் தவறு நடக்கும் முன்பாக அந்த ஜோடிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பொது வெளியில் கட்டிப்பிடித்தவாறு இருக்கும் ஜோடிகளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு மக்கள் செல்கின்றனர். ஆனால், பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டால், நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை கேட்கின்றனர் என்று சாக்‌ஷி மகராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.