இந்தியா

கொரோனா வைரஸ் ஒரு அரக்கன் - கோயில்களை திறக்க மோடியை வலியுறுத்தும் பூசாரிகள்

கொரோனா வைரஸ் ஒரு அரக்கன் - கோயில்களை திறக்க மோடியை வலியுறுத்தும் பூசாரிகள்

webteam

கொரோனா வைரஸை ஒரு “அரக்கன்” என்று கூறி, அகில இந்திய புரோகிதர்கள் அமைப்பு தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் கோயில்களையும் புனித யாத்திரை மையங்களையும் மீண்டும் திறக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அகில் பாரதிய தீர்த்த புரோகிதர்கள் மகாசபா தேசியத் தலைவர் மகேஷ் பதக், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “கொரோனா வைரஸ் ஒரு அரக்கன். அதை தெய்வீக சக்திகளால் மட்டுமே கொல்ல முடியும். அனைத்து கோவில்கள், சிவாலயங்கள் மற்றும் புனித யாத்திரை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டால், கொரோனா வைரஸால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது.

தற்போதைய ஊரடங்கில் தொழிற்சாலைகளுக்கு இணையாக கோயில்களும் நடத்தப்பட்டதால், இந்தியா தெய்வங்களின் கோபத்தை எதிர்கொள்கிறது. தற்போதைய சூழ்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் மதத் தளங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். கோயில்கள் மூடப்பட்டதால் பூசாரிகளின் பொருளாதார நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலின் கீழ் கோயில்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்தால், ஊரடங்கு உத்தரவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பூசாரிகளுக்கு சில நிதி உதவிகளை வழங்க இது உதவும். பல்வேறு மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிப்பது போல் மத வழிகாட்டிகளுக்கும் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில், “கொரோனா வைரஸ் ஒரு அரக்கன். அதனை தெய்வீக சக்திகளால் மட்டுமே கொல்ல முடியும். கூட்டுப்பிரார்த்தனைக்கு பிறகு பக்தர்களை கொரோனா வைரஸிலிருந்து மீள்வார்கள் என நான் நம்புகிறேன்”எனத் தெரிவித்தார். மேலும், கோயில்கள் மூடப்படுவது தெய்வங்களுக்கும் பக்தர்களுக்கும் இடையிலான இடைவெளி ஏற்பட்டுள்ளது என்றும், வீட்டிலுள்ள பிரார்த்தனைகள் மூலம் இடைவெளியை நிரப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.