இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சீனர்களுக்கான இ-விசா வசதி நிறுத்தி வைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - சீனர்களுக்கான இ-விசா வசதி நிறுத்தி வைப்பு

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இ-விசா சேவையை தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்துவர சென்ற இரண்டாவது ஏர் இந்தியா விமானம் 323 பயணிகளுடன் டெல்லி வந்து சேர்ந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 53 பேர், மாலத்தீவை சேர்ந்த 7 பேர் அடங்குவர். இதுவரை சீனாவிலிருந்து மொத்தம் ‌654 இந்தியர்கள் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் சிறப்பு ராணுவ முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 14 நாட்களுக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே கேரளாவில் கொரோனா ‌வைரஸ் நோய்‌ தாக்குதலால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, சீனாவில் இருந்து கே‌ரளா வந்த மாணவி‌‌ ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு , அவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சீனர்கள், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினர்க்கு இ-விசா வசதியை தற்காலிகமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.