கோவிட் தடுப்பூசி, உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனு | தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

PT WEB

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இதனால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. ஆனால், இதனை மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது எனவும் அது பக்கவிளைவுகளைதான் ஏற்படுத்துகிறதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ’’கொரோனா தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், எதுபோன்ற பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனுதாரர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்’’ என தெரிவித்தார். முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!