கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எந்த மாநிலமும் ரயில் சேவையை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கவில்லை என இந்திய ரயில்வே போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரயில்வே போர்டு தலைவர் சுனீத் சர்மா, “அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வெப்பநிலை சோதிக்கப்படுகிறது, கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நான்காயிரம் ரயில்வே பெட்டிகள் நாட்டின் பல பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 120 பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்
இந்திய ரயில்வே சார்பில் தற்போது நாளொன்றுக்கு 1,490 விரைவு ரயில்களும், 5,397 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.