இந்தியா

பொதுமுடக்க காலம்: உற்பத்தி உள்ளிட்ட 9 துறைகளில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு

பொதுமுடக்க காலம்: உற்பத்தி உள்ளிட்ட 9 துறைகளில் லட்சக்கணக்கானோர் வேலையிழப்பு

Veeramani

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் உற்பத்தி துறை, கட்டுமானத்தறை உள்ளிட்ட 9 முக்கிய துறைகளில் ஏராளமானோர் வேலை இழந்து உள்ளது புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மக்களவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனனா பொது முடக்கம் அமல்படுத்தபடுவதற்கு முன்பு அதாவது கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதிக்கு முன்பு உற்பத்தித் துறையில் 98.7 லட்சம் ஆண்களும் 26.7 லட்சம் பெண்களும் பணிபுரிந்து வந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி 87.9. லட்சம் ஆண்களும், 23.3 லட்சம் பெண்களும் இருந்துள்ளனர்.

அதேபோல கட்டுமான துறையை பொருத்தவரை, பொது முடக்கத்திற்கு முன்பு 5.8 லட்சம் ஆண்கள் 1.8 லட்சம் பெண்கள் பணிபுரிந்து வந்த நிலையில் 2020 ஜூலை 1-ஆம் தேதி கணக்குப்படி 5.1 லட்சம் ஆண்களும் 1.5 லட்சம் பெண்களுமே இருந்துள்ளனர்.

வர்த்தகத் துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, சுற்றுலாத்துறை, நிதி, சேவை துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்துள்ளது.