இந்தியா

கொரோனா அச்சம்: சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் தேக்கடி

கொரோனா அச்சம்: சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படும் தேக்கடி

kaleelrahman

கொரோனா விதிமுறை தளர்வுகளால் சர்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடி திறக்கப்பட்டும், கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழக-கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ளது சர்வதேச சுற்றுலாத் தலமான தேக்கடி. கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிப்பால் கடந்த மே மாதம் மூடப்பட்ட தேக்கடி, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஓணம் பண்டிகை தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டது. ஓணம் பண்டிகை விடுமுறை காலங்களான ஒரு வாரம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஓணம் பண்டிக்கைக்குப்பின் கொரோனா பரவல் எதிர்பாராத அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்தது. தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து தேக்கடி வெறிச்சோடி காணப்படுகிறது.