இந்தியா

கைதிகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதியுங்கள்: உச்சநீதிமன்றம்

கைதிகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதியுங்கள்: உச்சநீதிமன்றம்

webteam

கைதிகளுக்கு பரோல் வழங்குவது தொடர்பான விதிகளை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்‌டனை விதிக்கட்ட அஸ்பாக், தனது தொடர்ந்து பரோல் அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளை திருத்தவே தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், அந்த நோக்கத்தை அடையும் வகையில் பரோலில் விடுவிப்பது சட்டத்திற்கு உட்பட்டது தான் என தெரிவித்தனர்.

குற்றவாளிகள் தங்களின் குடும்ப மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பரோல் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் திருந்தி வாழ்வதில் ஆர்வம் உள்ள நன்னடத்தை மிக்க குற்றவாளிகள் குறைந்த காலத்திற்காவது சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்‌. எனவே தண்டனை கைதிகளை பரோலில் தற்காலிகமாக விடுதலை செய்வது மற்றும் நீண்ட கால தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது ஆகியன குறித்து 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விதிகளை மத்திய அரசு மேம்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.