இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் பணி - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் பணி - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

webteam

புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடுக்கபட்டிருக்கிறது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப்பணி ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு நிலுவையில் உள்ளபோது கட்டுமான பணிகளை எப்படி தொடங்கினீர்கள், யார் அனுமதி கொடுத்தது என உச்சநீதிமன்றம் கேள்விகளை முன்வைத்தது. இதுகுறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சுசார் மேத்தாவும், கட்டுமானங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதிபடுத்துங்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.