பாஜக - காங்கிரஸ் PT Web
இந்தியா

மக்களவை தேர்தல் | காங்கிரஸ் vs பாஜக மக்களவை தேர்தலில் கடந்து வந்த பாதை!

மக்களவைத் தேர்தல் வரலாற்றில் காங்கிரஸ் மற்றும் பாஜக வென்ற தொகுதிகள் குறித்த ஓர் ஒப்பீட்டை பார்க்கலாம்.

PT WEB

காங்கிரஸ் கடந்து வந்த பாதை...

1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் 364 இடங்களை வென்றது.

அடுத்த தேர்தலில் இந்த எண்ணிக்கை 371 ஆக உயர்ந்த நிலையில் 1962இல் 361 ஆகவும் 1967இல் 283 ஆகவும் குறைந்தது.

எனினும் 1971ஆம் ஆண்டு காங்கிரஸ் வென்ற இடங்கள் 352 ஆக அதிகரித்தது.

அவசர கால நிலைக்கு பின் 1977இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 154 இடங்களை மட்டுமே வென்று முதன்முறையாக ஆட்சி பீடத்தை இழந்தது.

அடுத்து 1980இல் நடந்த தேர்தலில் 353 இடங்களை காங்கிரஸ் வென்றது.

1984இல் இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 415 இடங்களை வென்றது.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கட்சி ஒரு தேர்தலில் வென்ற அதிகபட்ச தொகுதிகள் இதுவே ஆகும்.
காங்கிரஸ் - பாஜக

இது 1989இல் 197 ஆக குறைந்து 1991இல் 232 ஆக உயர்ந்தது.

இதன் பின் 141,114, 145 என குறைந்த தொகுதிகள் எண்ணிக்கை 2009இல் 206 ஆக அதிகரித்தது.

2014இல் 44 இடங்களையும் 2019இல் 52 இடங்களையும் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

பாஜக கடந்து வந்த பாதை...

மறுபுறம் பாஜக 1984இல் தனது தொகுதிகள் எண்ணிக்கையை தொடங்கியது. அந்தாண்டில் 2 பேர் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றனர். இது 1989இல் 85, 1991இல் 120, 1996இல் 161 என அதிகரித்துக்கொண்டே வந்தது. அடுத்த 2 தேர்தல்களில் ஒரே எண்ணிக்கையில் 182 தொகுதிகளில் பாஜக வென்றது. 2004, 2009 ஆகிய தேர்தல்களில் பாஜக வென்ற இடங்கள் முறையே 138, 116 ஆக குறைந்தது.

எனினும் 2014 தேர்தலில் 282 இடங்களிலும் 2019இல் 303 இடங்களிலும் வென்று பாஜக ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ் வென்ற தொகுதிகள்

காங்கிரஸ்

ஆண்டு தொகுதிகள்

1952 364

1957 371

1962 361

1967 283

1971 352

1977 154

1980 353

1984 415

1989 197

1991 232

1996 140

1998 141

1999 114

2004 145

2009 206

2014 44

2019 52

பாஜக வென்ற தொகுதிகள்

ஆண்டு - தொகுதிகள்

1984 2

1989 85

1991 120

1996 161

1998 182

1999 182

2004 138

2009 116

2014 282

2019 303