இந்தியா

தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை

தேர்தல் முடிவுகள்: கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை

webteam

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதே போல் கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தள்ளி வைக்கப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுவருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மற்றும் பந்தாரா - கோண்டியா, உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 மக்களவை தொகுதிகளில் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. ‌இதில் நாகாலாந்து தவிர 3 தொகுதிகளும் பாரதிய ஜனதா வசமிருந்தவை. ஜார்கண்ட் மாநிலத்தில் 2 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மேகாலயா, பீகார், உத்தராகண்ட், பஞ்சாப், மகாராஷ்டி ரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதேபோல் தேர்தல் ரத்து செய்யப்பட்ட கர்நாடக மாநிலத்தின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முனிரத் னா 32 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

கேரளாவின் செங்கானூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உத்தரபிரதேச மாநிலத்தின் நூர்புர் தொகுதியில் சமாஜ்வாடி, பிகாரின் ஜோஹிகாட் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், பஞ்சாபின் சாகோட், மகாரஷ்ட்ராவின் பாலுஸ் கடேகான், மேகாலயாவின் அம்பதி, உத்தரகாண்டின் தராளி  ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் மகேஷ்டலாவில் திருணாமுல் காங்கிரஸும், ஜார்கண்டின் கோமியா தொகுதிகளில் பாஜகவும் முன்னிலையில் உள்ளன.

மக்களவைக்கு நடந்த இடைத்தேர்தலில் மகாராஷ்ட்ராவின் பல்கர் தொகுதியில் பாஜகவும் பந்தாரா-கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நாகலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. உத்தரபிரதேசத்தின் கைரானாவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட ராஷ்ட்ரிய லோக் தள் வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள் ளார். இந்த தொகுதி பாஜக வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.