கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் விடுத்த அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளதோடு, ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதால் பாரதிய ஜனதாவின் வெற்றி எளிதாகிவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவா சட்டமன்றத்தேர்தலில் தனது அடையாளத்தை பதிவு செய்ய முயற்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், ஒரு மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது. தங்களது தலைவர்களை அவர்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ், அவர்களின் அழைப்பை நிராகரித்துள்ளது. இதற்கிடையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போதிய ஆதரவைப் பெறத் தவறிய ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி எளிதாகிவிட வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: 'பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வர்' - கெஜ்ரிவாலின் புது ரூட் கை கொடுக்குமா?