ப.சிதம்பரம் - பிரதமர் மோடி முகநூல்
இந்தியா

"பொருளாதார வளர்ச்சி தரவரிசையில் இல்லை; தனிநபர் வருமானத்தில் இந்தியா எந்த இடத்தில்?" - ப.சிதம்பரம்

யார் அடுத்த பிரதமராக வந்தாலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3ஆவது இடத்திற்கு முன்னேறுவது நிச்சயம் எனவும் இதை தனது சாதனையாக காட்டிக்கொள்ள மோடி முயற்சிக்கிறார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

PT WEB

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், ”எப்படியும் நடக்க உள்ள நிகழ்வு ஒன்றை தான் நிகழ்த்தி காட்ட உள்ளதாக பிரதமர் வாக்குறுதி அளிப்பது கேலிக்கூத்து. யார் பிரதமரானாலும் இந்தியா 3ஆம் இடத்திற்கு செல்வது நிச்சயம். எதையும் மிகைப்படுத்தி காட்டுவதில் பிரதமர் மோடி நிபுணராக உள்ளார்.

இந்தியாவின் மக்கள் தொகை மிகப்பெரியது என்று இதில் 3ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதில் எந்த மாயாஜாலமும் இல்லை. ஒரு நாட்டு மக்கள் செழிப்பாக இருக்கிறார்கள் என்பதை அதன் பொருளாதார தரவரிசையை வைத்து துல்லியமாக அளவிட முடியாது. தனி நபர் வருமானமே அதற்கான சரியான அளவுகோல். தனி நபர் வருமானத்தை பொறுத்தவரை ஐஎம்எஃப் கணிப்புப்படி இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது.” என்று குறிப்பிட்டார்.