இந்தியா

`தேசத்துக்காக வாழ்வையே அர்பணித்தவர்’- கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் உருவப்படம்!

`தேசத்துக்காக வாழ்வையே அர்பணித்தவர்’- கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கர் உருவப்படம்!

PT

கர்நாடகா சட்டமன்றத்தில் சவார்க்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் சட்டமன்றத்திலேயே போராட்டம் செய்தனர். அத்துடன் சபாநாயகரிடம் `சவார்க்கரின் உருவப்படத்திற்குப் பதிலாக வால்மீகி, பாசவான்னா, கனகா தாசா, பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர்களின் உருவப்படத்தையும் வைக்கவேண்டும்’ என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறுகையில், “எப்போதெல்லாம் விவேகானந்தர், சுபாஷ் சந்திரபோஸ், சாவர்க்கர், மகாத்மா காந்தியின் கொள்கை பற்றி மக்களிடம் கூறுகிறோமா, அப்போதெல்லாம் இப்படித்தான் துரதிஷ்டவசமாக அதை எதிர்க்கின்றனர். அவர்கள் எல்லாம் தேசத்திற்காக அவர்களின் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்” என்றுள்ளார்.

மேலும் பேசுகையில், “விடுதலை வீரர்களின் தேசப்பற்றைப் பற்றி சட்டமன்ற உறுப்பினர்களிடமும், மக்களிடமும் பகிர, காங்கிரஸ் கட்சி  விரும்புவதில்லை. விடுதலை வீரர்கள் பற்றி பள்ளிப் புத்தகங்களுள் குறிப்பிட்டபோதும். இவ்வாறு தான் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு உண்மை வெளியாவதில் விருப்பம் இல்லை.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Unfortunate! Whenever we want to put idealism before people via people like Vivekananda, SC Bose, Savarkar, Mahatma Gandhi, they oppose.These people dedicated their life to country&amp;they don&#39;t want their pics: K&#39;taka Min BC Nagesh on Cong protest over Savarkar portrait in Assembly <a href="https://t.co/afdNvBIBxa">pic.twitter.com/afdNvBIBxa</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/1604764325129789440?ref_src=twsrc%5Etfw">December 19, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அவர்கள் (காங்.) விடுதலையின் போது நடந்தவையையும், விடுதலைக்குப் பின் நடந்தவற்றையும் வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டனர்” என்றுள்ளார்.
-ஷர்நிதா