இந்தியா

“மதுக் கடைகளை திறக்க வேண்டும்” - காங்கிரஸ் எம்எல்ஏ சொன்ன காரணம் என்ன தெரியுமா..?

“மதுக் கடைகளை திறக்க வேண்டும்” - காங்கிரஸ் எம்எல்ஏ சொன்ன காரணம் என்ன தெரியுமா..?

webteam

மதுக்கடைகளை திறக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆங்காங்கே மதுப்பிரியர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதும் போலீசார் அவர்களை கைது செய்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக்கோரி ராஜஸ்தான் மாநிலம் சங்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் மதுக்கடைகள் மூடியிருப்பது அரசுக்கு பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

மது குடிப்பது தொண்டையில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கும். ஆல்கஹால் நிறைந்த சானிடைசர்களை கொண்டு கழுவும்போது கைகளில் உள்ள கொரோனா வைரஸ் நீக்கப்படும் என்றால் ஆல்கஹால் நிறைந்த மது குடித்தால் அது தொண்டையில் உள்ள வைரஸையும் நிச்சயம் நீக்கும். எனவே மதுக்கடைகளை மட்டும் திறக்க வேண்டும்” என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.