இந்தியா

ராம்கார் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

ராம்கார் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை

Rasus

ராஜஸ்தான் மாநிலத்தின் ராம்கார் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் சட்டப்பேரவை தொகுதிக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் ராம்கார் சட்டப்பேரவை தொகுதிக்கும் கடந்த 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஜிந்த் தொகுதியில் 70 சதவீத வாக்குகளும், ராம்கார் தொகுதியில் 78.9 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் சவாலாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இதில் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. 5 சுற்றுகள் முடிவுகள் காங்கிரஸ் வேட்பாளர் சாஃபியா கான் 19,592 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக பாஜக 14,719 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதேசமயம் ஜிந்த் தொகுதியில் ஜன்நாயக் ஜனதா கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங் சௌதாலா 3,639 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக பாஜக 2,835 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் 2,169 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.