ராஜஸ்தானில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 199 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அங்கு காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தற்போது ராஜஸ்தானில் வசுந்தர ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.