காங்கிரஸ் புதிய தலைமுறை
இந்தியா

மக்களவை தேர்தல் | முதன்முறையாக 400 இடங்களுக்கும் கீழ் காங்கிரஸ் போட்டி... காரணம் என்ன?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவு குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது பேசுபொருளாகியுள்ளது. இதை ‘பாஜகவை வீழ்த்த திட்டமிட்டு கவனமாக எடுக்கப்பட்ட முடிவு’ என்கிறார் காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.

PT WEB

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 328 இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “பாஜகவை தோற்கடிக்க மிகவும் கவனமாக திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்.

ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே

மேலும், “அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் ஆளும் கூட்டணியை வீழ்த்துவது எளிது என்பதற்காக, தொகுதிகளின் எண்ணிக்கையில் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதை நம்பிக்கை குறைவாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராத அளவுக்கு தடுத்து நிறுத்தும் எண்ணிக்கையிலான தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை,

1952இல் நடந்த முதல் தேர்தலில் 479 தொகுதிகளிலும் அடுத்த தேர்தலில் 490 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

1962இல் 488

1967இல் 516,

1971இல் 441,

1977இல் 492,

1980இல் 492 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

1984இல் 517,

1989இல் 510, 1991இல் 500 தொகுதிகளில் களமிறங்கிய காங்கிரஸ்

1996இல் அதிகபட்சமாக 529 தொகுதிகளில் போட்டியிட்டது.

1998இல் 477,

1999இல் 453,

2004இல் 417, 2009இல் 440,

2014இல் 464,

2019இல் 421

தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

இம்முறை அதாவது 2024இல் காங்கிரஸ் மிகக்குறைந்த பட்சமாக 328 தொகுதிகளில் போட்டியிடுகிறது. குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸின் வியூகம் எடுபடுமா என்பது சுவாரசியமான எதிர்பார்ப்பாக உள்ளது.