காங்கிரஸ் vs பாஜக  முகநூல்
இந்தியா

காங்கிரஸ் மற்றும் பாஜக.. 7 கட்டத்தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிய வாக்கு சதவீதம்..

இந்தியாவில் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடந்த தேர்தலில் மொத்தம் 66.1 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதில் பாஜகவுக்கு 36.6 சதவிகித வாக்குகளும், காங்கிரஸுக்கு 21.2 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகா செல்வன்

முதற்கட்டத்தில் பாஜகவுக்கு 30.8 சதவிகிதமாக இருந்த வாக்குப்பதிவு 3ஆவது கட்டத்தில் 45.3 சதவிகிதமாக உயர்ந்தது. அதன்பிறகு, 4 மற்றும் 5ஆம் கட்டத்தில் வாக்கு சதவிகிதம் கணிசமாக குறைந்து, பின் உயர்ந்து மீண்டும் 7ஆவது கட்டத்தில் 33.3ஆக குறைந்தது.

ஆனால், காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் முதல் 3 கட்டங்களில் நேர்மறையான அளவிற்கு உயர்ந்து காணப்பட்டது. தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் அமைத்திருந்த கூட்டணியும், அதன் வாக்குசதவிகிதத்திற்கு பெரிதும் கைகொடுத்தன. 4ல் இருந்து 7ஆம் கட்ட தேர்தல் வரை காங்கிரஸின் வாக்குசதவிகிதம் கணிசமாக குறைந்தாலும், ஒட்டுமொத்தமாக 21.2 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

ராகுல் காந்தி - காங்கிரஸ்

காங்கிரஸ் மட்டுமின்றி, அதன் தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வாக்கு சதவிகிதம் சீரான அளவிலேயே ஒவ்வொரு கட்டத்திலும் பதிவாகியுள்ளது. 2ஆவது, 3ஆவது கட்டத்தேர்தல்களை தவிர்த்து மற்ற அனைத்து கட்டங்களிலும் காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் 2 இலக்க எண்களிலேயே வாக்குசதவிகிதத்தை பெற்றுள்ளன.

சோபிக்காத பாஜக கூட்டணி கட்சிகள்

பாஜக கூட்டணி

அதேசமயம், பாஜக தனித்து கணிசமாக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் 4ஆம் கட்டத்தேர்தலை தவிர மற்ற எதிலும் 2 இலக்கத்தை எட்டவில்லை. இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்ததால் ஆளும் பாஜகவிற்கு பெரும் சாதகமாக அமையும் என தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், உண்மையான வாக்குப்பதிவு நிலவரத்தை பார்க்கும் போது, கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செயல்பாடுகள் அடிப்படையிலேயே வாக்குசதவிகிதம் பதிவாகி இருப்பது தெரியவருகிறது.