குஜராத்தில் பாரதிய ஜனதா அடைந்த தோல்விகளுக்கு முதலமைச்சர் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா, கொரோனா இரண்டாவது அலையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த குற்றத்தையும், தவறான ஆட்சியையும் மறைக்க விஜய் ருபானியை பாரதிய ஜனதா விலையாக கொடுத்துவிட்டதாக விமர்சித்துள்ளார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால், விஜய் ருபானியை மாற்றுவதைத் தவிர பாரதிய ஜனதாவுக்கு வேறு வழியில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் அர்ஜூன் மோத்வாடியா தெரிவித்துள்ளார். இதேபோல் குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இ்ட்டாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் ருபானி வெளியேற்றப்பட்டிருப்பது பாரதிய ஜனதாவுக்கு உதவாது என்று விமர்சித்திருக்கிறார்.
முதலமைச்சரை மாற்றிய பின்னர் அரசின் தோல்விகளால் அனுபவித்த வலியை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பாரதிய ஜனதா கருதுகிறதா என்றும் கோபால் இ்ட்டாலியா கேள்வி எழுப்பி உள்ளார்.