உமர் அப்துல்லா pt web
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் அரியணை ஏறும் காங்கிரஸ் கூட்டணி..!

ஜம்மு, காஷ்மீர் சட்டப்பேரவைத்தேர்தலில் 48 இடங்களைப்பிடித்து தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

PT WEB

90 தொகுதிகளை கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வென்றுள்ளது. இதன் கூட்டணியான காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 48 தொகுதிகளில் வென்றதன் மூலம் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அரியணை ஏறுகிறது.

பாரதிய ஜனதா கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன. 7 சுயேச்சைகளும் வெற்றிபெற்றிருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபின், பத்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.