இந்தியா

பதவியேற்பை 2 நாட்கள் தள்ளி வையுங்கள் - காங்கிரஸ் வழக்கறிஞர் சிங்வி

பதவியேற்பை 2 நாட்கள் தள்ளி வையுங்கள் - காங்கிரஸ் வழக்கறிஞர் சிங்வி

webteam

எடியூராப்பாவின் முதலமைச்சர் பதவியேற்பை இரண்டு நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆட்சி அமைக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு 1.45 மணி முதல், விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்ஏ போப்தே ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வருகிறது. இதில் காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி காரசாரமான வாதத்தை முன்வைத்துள்ளார்.

வாதத்தின் போது பேசிய சிங்வி, ‘நாங்கள் கர்நாடக ஆளுநரை எதிர்க்கவில்லை; கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த அவரின் முடிவைதான் எதிர்க்கிறோம். பாஜகவிற்கு தெளிவான பெரும்பான்மை இல்லை. எனவே ஆளுநர் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது. டெல்லி, கோவா உட்பட 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது. குடியரசுத் தலைவர் முடிவையே உச்சநீதிமன்றம் தலையிட்டு மாற்றியுள்ளது. எனவே ஆளுநரின் முடிவில் தலையிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவில் தலையிட வேண்டாம், பதவி ஏற்பை தற்காலிகமாக இரண்டு நாட்கள் தள்ளிவைக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.