மான் கி-பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞனை இன்று பாராட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் பிலால் தர், குப்பைகளை அகற்றும் பணியை செய்து வருகிறார். இவ்வாறு அகற்றப்படும் குப்பைகளை விற்று ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை வருமானம் ஈட்டி வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வரும் இவர், ஜூலை மாதம் வரை 12,000 கிலோ குப்பைகளை அகற்றியுள்ளார்.
இவரது இந்த முயற்சியை பாராட்டும் வகையில் ஸ்ரீநகர் நகராட்சி இவருக்கு குடிமைத் தூதர் என்ற பொறுப்பை வழங்கியது. மேலும் மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பிரசாரம் செய்யவும் நகராட்சி சார்பாக இவருக்கு சிறப்பு சீருடையும் வாகனமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மான் கி-பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய மோடி, பிலால் தர்ரை பாராட்டியுள்ளார். பிலால் தர் தனது சொந்த முயற்சியால் தால் ஏரியில் இருந்து 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான குப்பைகளை அகற்றியுள்ளதாக மோடி குறிப்பிட்டார்.