இந்தியா

''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா

''வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும்'' - அமித்ஷா

webteam

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், மொழி, சமூக அடையாளம் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் என்ற பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற அவர், குடியுரிமை  சட்டத்திருத்தத்திற்கு எதிராக வன்முறையை தூண்டி விடுவது காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டினார். இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறி உள்ளது காங்கிரஸ் கட்சியினரை வயிற்றெரிச்சல்பட வைத்திருப்பதாகவும், அதை பொறுக்க முடியாமல் போராட்டங்களை நடத்த அக்கட்சி தூண்டி வருகிறது என்றும் விமர்சித்தார். 

அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், சமூக அடையாளம், மொழி மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தும் குடியுரிமை சட்டத்திருத்தத்தால் பாதிக்கப்படாது என்றும், அவை அனைத்தும் அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்தார்.