இந்தியா

சாமியாரிடம் பங்குச் சந்தை ரகசியங்களை பகிர்ந்த முன்னாள் அதிகாரி - செபி குற்றச்சாட்டு

சாமியாரிடம் பங்குச் சந்தை ரகசியங்களை பகிர்ந்த முன்னாள் அதிகாரி - செபி குற்றச்சாட்டு

ஜா. ஜாக்சன் சிங்

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை சாமியார் ஒருவரிடம் பகிர்ந்ததாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி குற்றம்சாட்டியுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா தேசிய பங்குச் சந்தையின் தலைமை பொறுப்பை வகித்தபோது, இமயமலையில் வசிக்கும் சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாக செபி தெரிவித்துள்ளது. அந்த சாமியாரிடம் வணிக ரீதியிலான திட்டங்கள், நிர்வாக கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்த முன்கூட்டிய கணிப்புகள் ஆகியவற்றை பகிர்ந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செபி, இனிவரும் 3 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடக் கூடாது எனவும், செபியிடம் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் இடைத்தரகராக பணிபுரியக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.