பாங்காக் நகரில் இருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு பாம்புகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய ஒரு பயணியை சோதனையிட்டனர். பாங்காக்கில் இருந்து வந்த அந்த நபரின் லக்கேஜில் அரிய வகையிலான மலைப் பாம்புகள் ஒன்பதும் மேலும் இரண்டு பாம்புகளும் இருந்தது தெரிய வந்தது.
பிஸ்கெட் மற்றும் கேக் பேக்கெட்களுக்குள் பாம்புகளை மறைத்து ஸ்கேனரில் இருந்து தப்பி, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத் துறை சட்டம் 1962ன் கீழ் பாம்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதைக் கடத்தி வந்தவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.