Protesty pt desk
இந்தியா

அரசு வழங்கிய நிவாரணநிதியில் இருந்து EMI-யை வசூலிப்பதா? வங்கிக்கு எதிராக வயநாட்டில் வெடித்த போராட்டம்

webteam

செய்தியாளர்: மகேஷ்வரன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் தற்போது முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசின் மூலம் உடனடி நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், பேரிடர் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் உள்ள கேரளா கிராமின் வங்கியில் அப்பகுதியை சேர்ந்த பலர் கடன் பெற்றுள்ளனர்.

Protest

இவர்கள், வீடுகளை இழந்து, வேலைகளுக்கும் செல்ல முடியாமல் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய நிவாரண தொகையிலிருந்து, அவர்கள் செலுத்த வேண்டிய EMI தொகையை 1500 முதல் 5000 ரூபாய் வரை வங்கி நிர்வாகம் எடுத்திருக்கிறது.

இதற்கு எதிராக கல்பெட்டா உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கிராமின் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ், யூத் லீக், DYFI ஆகிய இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளிடையே பல மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர் போராட்டத்தை அடுத்து வயநாடு மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி இருப்பவர்களிடம் அடுத்த ஓராண்டிற்கு கடன்களை வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது (MORATORIUM PERIOD).

Protest

அதே போல விவசாய கடன்களை அடுத்த 4 ஆண்டுகளுக்கு வசூலிக்கக் கூடாது எனவும் உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டனர்.