இந்தியா

ஆந்திர வங்கியின் பெயரை மாற்றாதீர்கள் - பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

ஆந்திர வங்கியின் பெயரை மாற்றாதீர்கள் - பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

webteam

ஆந்திரா வங்கியின் பெயரை மாற்றக் கூடாது என்று ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை போக்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு பொது துறை வங்கிகள் சிலவற்றை இணைக்கும் முடிவை அறிவித்தது. இதில் ஆந்திரா வங்கியை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதற்கு ஆந்திர அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 

இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திர மக்களின் உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையில் பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று முடிவு எடுத்தது. இந்த கடிதத்தில் ஆந்திரா வங்கியை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைத்தால் ஆந்திர வங்கி என்ற பெயர் மறைந்துவிடும். இந்த வங்கி ஆந்திர மக்களுடன் மிகவும் தொடர்புடையது. ஆகவே ஆந்திர மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1923ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆந்திரா வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கியை தனியார் வங்கியாக சுதந்திர போராட்ட வீரர் பட்டாபி சித்தராமையா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.