சோனம் வாங்சுக் முகநூல்
இந்தியா

’போராட்டம் முடியவில்லை, இது முதற்கட்டம்தான்’ - 21 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக்!

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தொடர்ந்த தனது 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தினை முடித்து கொண்டார் சோனம் வாங்சுக்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பொறியாளர், கல்வி சீர்திருத்தவாதி, காலநிலை ஆர்வலர் என கூறப்படும் சோனம் வாங்சுக் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தொடர்ந்த தனது 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தினை செவ்வாய்க்கிழமை முடித்து கொண்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். மார்ச் 6 ஆம் தேதி பூஜ்ஜிய வெப்பநிலையில் தொடங்கிய இவரின் போராட்டம் இன்று லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதில் வந்து நிற்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாநில அந்தஸ்தை லடாகிற்கு வழங்க வேண்டும், பழங்குடியின பகுதிகளில் நில பாதுகாப்பு மற்றும் சுயேட்சை உறுதி செய்ய அரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவது அட்டவணையில் லடாக்கினை சேர்க்க வேண்டும் என்பது அவர் வைத்த கோரிக்கைகளில் ஒன்று. இந்நிலையில், இக் கோரிக்கைகளை முன்னிறுத்தி மார்ச் 6 ஆம் தேதி போராட்டத்தினை முன்னெடுத்தார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்.

இந்நிலையில், இவருக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் பலர் திரட்டனர். உண்ணாவிரதத்தினை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும், தான் கூறிய படியே, 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று (26.3.2024) நிறைவு செய்து கொண்டார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “முதல் கட்ட போராட்டம் தான் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. ஆனால் போராட்டம் நிறைவடையவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போராட்டத்தில், கடந்த 20 நாட்களில் சுமார் 60,000 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.