ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மூன்று வெவ்வேறு மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 5 பேரும், பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் ஷதரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவமும் காவல் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி சுட்டத்தில் ஒரு அதிகாரியும் 4 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.
இதையடுத்து பயங்கரவாதிகள் அருகில் இருக்கும் கிராமத்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர்களை அழிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அனந்த் நாக் மற்றும் பந்திப்போரா மாவட்டங்களில் நடைபெற்ற மோதல்களில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.