இந்தியா

'எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - மத்திய அரசு மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டம்

'எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - மத்திய அரசு மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டம்

கலிலுல்லா

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை என தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுவந்தது. இதற்கான கால அவகாசம் வழங்கியும் கூட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடும் கோபத்தையும், அதிருப்தியையும் தெரிவித்தார். தங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்ப்பதாகவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்தார்.

தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால் சட்டங்களை ரத்து செய்துவிடுமாறும் தலைமை நீதிபதி காட்டமாக கூறினார். பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பாயங்களின் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருப்பது ஏன் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார். செப்டம்பர் 13ம் தேதி தான் இறுதி கால அவகாசம், இல்லை என்றால் அந்த பணிகளை நாங்களே செய்ய நேரிடும் என எச்சரித்தார்.