குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்த, அச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன.
இதனிடையே, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல்கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது.