இந்தியா

அக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.!

அக்டோபர் 1 முதல் மேற்குவங்கத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.!

Veeramani

பாதுகாப்பு வழிமுறைகளுடன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 50 பார்வையாளர்கள் அல்லது அதற்கும் குறைவானவர்களுடன் சினிமா திரையரங்குகள் மற்றும் திறந்தவெளி தியேட்டர்கள் மாநிலத்தில் இயங்க அனுமதிக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்கள் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி பாதுகாப்பு  விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசங்கள் அணிய வேண்டும் மற்றும்  கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் நாடு தழுவிய  பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து  திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

சினிமா திரையரங்குகள் மட்டுமல்லாமல்  ஜட்ராஸ், நாடகங்கள், ஓஏடிகள், மற்றும் அனைத்து இசை, நடனம்  மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகள் 50 பங்கேற்பாளர்களுடன் அல்லது அதற்கு குறைவானவர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.