இந்தியா

பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்ட வீரர்கள் உடல்: ராணுவம் விளக்கம்

பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்ட வீரர்கள் உடல்: ராணுவம் விளக்கம்

webteam

விபத்தில் உயிர் நீத்த ராணுவ வீரர்களை சாக்குப்பைகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் சுற்றி வைத்திருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ராணுவத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளிலும் அட்டை பெட்டிகளும் சுற்றி வைக்கப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் தளத்தில், ராணுவ வீரர்களின் சடலங்கள் இப்படிதான் அவரவர் வீடுகளுக்கு செல்கிறது என அட்டைப்பெட்டிகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த படத்துடன் செய்தி வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த விவகாரம் குறித்து ராணுவ தரப்பில் கூறப்படுவதாவது, வீரர்கள் இறந்த இடம் பனி மலையில் உயரமான ஒரு பகுதி என்றும் அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்து சுற்றிதான் சடலங்களை கீழே கொண்டு வர முடியும் என்றும், கவுஹாத்தியில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் இறந்த வீரர்களின் உடல்கள் முறைப்படி மரியாதை செய்யப்பட்டு மரப்பெட்டியில் இடப்பட்டு அவரவர் ஊர்களுக்கு அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.