இந்தியா

இந்தியாவில் பரவும் சீனாவின் புதிய ’கேட் கியூ’ வைரஸ்?: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை!

இந்தியாவில் பரவும் சீனாவின் புதிய ’கேட் கியூ’ வைரஸ்?: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை!

sharpana

கொரோனா வைரஸைத் தொடர்ந்து சீனாவிலிருந்து கேட் கியூ என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக ஐ.சி.எம்.ஆர் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்துதான் பரவியது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத்தொடங்கியது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பலவேறு நாடுகள் உள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசி பயன்பாட்டு முறை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளன. 

இந்நிலையில், புனேவிலுள்ள ஐ.சி.எம்.ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் தேசிய வைராலஜி பிரிவைச் சேர்ந்த ஏழு ஆராய்ச்சியாளர்கள் ’சீனாவிலும் வியட்நாம் நாட்டிலும் கொசுக்கள் மற்றும் பன்றிகளில் கேட் கியூ வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளன. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகின்றன.

நாடு முழுவதும் பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் இரண்டு பேரின் உடலில் இந்த வைரஸுக்கான ஆன்டிபாடிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பன்றிகளிடமும் மைனா போன்ற பறவைகளிடமும் காணப்படுவதால் எல்லா உயிரினங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.  கேட் கியூ வைரஸ் மனிதர்களுக்கு மூன்று இனக் கொசுக்களால் பரவும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்கள்.