இந்தியா

அசாம் பாலம்: சீனா கண்டனம்

அசாம் பாலம்: சீனா கண்டனம்

webteam

பிரம்மபுத்திராவில் கட்டப்பட்ட நாட்டின் நீளமான பாலத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, இதுபோன்ற கட்டமைப்புகளில் இந்தியா கவனமுடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான பாலத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரம்மபுத்திராவின் கிளை நதியான லோஹித் ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ., தூரம் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது அசாமின் தோலா பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தின் சதியா பகுதியையும் இணைக்கிறது. இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் அசாம், அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாக குறையும். இந்த பாலம் இரு மாநிலங்களுக்கு வர்த்தக போக்குவரத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என கூறும் சீனா, அசாமை இந்த பாலம் இணைப்பதால், எல்லை பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வரை இந்தியா இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.