லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேச எல்லை பிரச்னைகளுக்கு இடையே இந்தியாவுடன் தொடர் உயர்நிலை சந்திப்புகள், பேச்சுவார்த்தைகளுக்கு சீனா திட்டமிட்டு வருகிறது.
இந்தியா, சீனா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக லடாக் மற்றும் அருணாசல எல்லைப் பகுதிகளில் பிரச்னை நீடித்து வந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுடன் உயர்நிலை ஆலோசனைக் கூட்டங்களை நடத்த சீனா தயாராகி வருகிறது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி டெல்லி விரைவில் இந்தியா வரவுள்ள நிலையில், அதன்பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்லவுள்ளார். சீன அதிபரின் அதிகாரக்குழு உறுப்பினர்கள், முக்கிய உயரதிகாரிகளும் அடுத்தடுத்து இந்தியா வரவுள்ளனர்.
சமீபத்திய செய்தி: தூங்குவதற்கு முன் எத்தனை குழந்தைகள் செல்போன் பார்க்கிறார்கள்? - ஸ்மிருதி இரானி தகவல்