சீனா முகநூல்
இந்தியா

சீனாவின் துயரம்|18 மணி நேர தொடர் உழைப்பு..களைப்பில் பைக்கில் உறங்கிய டெலிவரி மேன்.. பிரிந்தது உயிர்!

ஜெனிட்டா ரோஸ்லின்

18 மணிநேர தொடர் உழைப்பிற்கு பிறகு பைக்கில் சிறுது நேரம் தூங்கிய டெலிவரி மேன்...தூக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்ட வீடியோ ஒன்றின் மூலமாக இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கிழக்கு சீனாவில் Zhejiang மாகாணத்தில் உள்ள Hangzhou வில் அல்லும் பகலும் அயராது உழைத்த 55 வயது டெலிவரி மேன், வேலைப்பழுவால் ஏற்பட்ட சோர்வை போக்க சிறுதுநேரம் பைக்கில் தூங்க.. தூக்கத்திலேயே உயிரந்த பரிதாபத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு.

யுவான் என்ற 55 வயது நபர் மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் இருந்து ஹாங்சோவுக்கு தனது குடும்பத்தோடு குடிப்பெயர்ந்துள்ளார். இங்கு உணவு டெலிவரி மேனாக பணியாற்றிய யுவான்.. இவரது மூத்த மகனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், குடும்ப தேவைகளை பூர்த்தி செய்தும் தனது 16 வயது மகனை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்றும் இரவும் பகலுமாக உழைத்து வந்துள்ளார்..

இடைவிடாது 18 மணி நேர கடின உழைப்புக்கு பெயர் பெற்ற யுவான், ”ஆர்டர் கிங்” என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளாக செப்டம்பர் 5 ஆம் தேதி, தனக்கு பதிலாக அடுத்த ஆள் வரும்வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பணியாற்றியுள்ளார்.. இதனால், அசதி காரணமாக தனது மின்சார வாகனத்திலேயே சிறுது நேரம் உறங்கியுள்ளார் யுவான்.. அப்போது அவர் நினைக்கவில்லை, இந்த உறக்கம் நிரந்தர உறக்கமாக இருக்குமென்று..

இந்நிலையில், வாகனத்தில் உறங்கியபடி கிடந்த யுவான், பிறகு எழும்பவே இல்லை.. அப்போதுதான் தெரிந்தது அவர் இறந்துவிட்டார் என்று..

இவரது கடின உழைப்பு குறித்து இவரது நண்பர்கள் கூறும் தகவல்கள் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது..

இதன்படி, பொதுவாகவே, யுவான் அதிகாலை 3 மணி வரை வேலை செய்துவிட்டு , காலை 6 மணிக்கு எழுந்து மீண்டும் டெலிவரி செய்வாராம் .. இதற்கிடைப்பட்ட நேரத்தில் தூங்கும் அவர் சோர்வாக உணரும் போது தனது பைக்கிலேயே சிறுது நேரம் உறங்குவாராம்.. பிறகு ஆர்டர் வந்தவுடன் வேலைக்கு திரும்பத்தயாராக இருப்பார் என இவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு 500- 600 yuan , அதாவது, இந்திய மதிப்பில் ரூ- 40,000 முதல் 48,000 வரை இவர் சம்பாதிப்பதாகவும், மழை நாட்களில் 700 yuan சம்பாதிப்பதாகவும் கூறுகின்றனர்.

தனது 55 வயதிலும் அயராது உழைக்கும் இந்த நபர் தனது குழந்தையின் கல்விக்காக உழைத்த உழைப்பு ஏராளமாம்..

இவரை குறித்து தெரிவித்த அவரது சக நண்பர் ஒருவர் ”யுவான் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு.. டெலிவரி வழங்க சென்றபோது விபத்து ஏற்பட்டு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.. வெறும் 10 நாட்களே ஓய்வெடுத்த யுவான்..மீண்டும் பணிக்கு திரும்பினார். இந்தநிலையில்தான், சரியாக இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த சோகச்சம்பவம் அரங்கேறியது.” என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் , மறுபுறம் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது..

காரணம்: கூடுதல் பணிச்சுமை, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தொடரும் தொடர்பணிகள் ..இதனால் ஏற்படும் ஓய்வில்லாமை .. இறுதியில் ஏற்படும் உயிரிழப்புகள்..இப்படி எத்தனை உயிர்களை பலியாக கொடுக்க வேண்டும் என்பதுதான்..

சீனாவில் உணவு விநியோகத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு பெரிய தளங்களான Meituan மற்றும் Ele.me ஆகியவை முறையே 7.45 மில்லியன் மற்றும் 4 மில்லியன் ஆக்டிவ் ரைடர்களைப் பயன்படுத்துகின்றன.

சன் பிங், இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் கம்யூனிகேஷன், சீன அகாடமி ஆஃப் சோஷியல் சயின்சஸ், 2018 முதல் 2021 வரை வேலை செய்த முழுநேர ரைடர்கள் தங்களின் வேலை நேரத்தை தாண்டியும் வேலை செய்கிறார்களாம்.

2018 ஆம் ஆண்டில், சுமார் 36.5 சதவீத ரைடர்கள் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்துள்ளனர். 2021ல், எண்ணிக்கை 62.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த பணிச்சுமை, நேரத்திற்கு மீறிய உழைப்பு என்பது உடல்,மன ஆரோக்கியத்தை கெடுப்பதுமட்டுமல்லாமல், தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் மீதான மிகப்பெரிய கேள்வி குறியை எழுப்பியுள்ளது..

இது சீனாவில் மட்டுமல்லாது... குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இரவும் பகலும் அயராது உழைக்கும் இன்னும் எத்தனையோ யுவான்கள் உலகெங்கிங்கும் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.