இந்தியா

குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்: பாடப்புத்தக்கத்தில் புகார் எண்கள்!

குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்: பாடப்புத்தக்கத்தில் புகார் எண்கள்!

webteam

குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு உள்ளிட்டவை குறித்து புகார் அளிப்பதற்கான உதவி மையங்களின் எண்கள் என்செர்ட் (NCERT) பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளன. 

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக புகார்கள் காவல்நிலையங்களில் தேக்கடமைந்துள்ளன. இதனால் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள், தொந்தரவுகள் உள்ளிட்ட குற்றங்களுக்கு புகார் தெரிவிக்கும் உதவி எண்களை, பெற்றொர்களிடம் கொண்டு சேர்க்க குழந்தை நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின், அட்டைப்பக்கத்தின் பின்புறம் குழந்தைகள் மீதான பாலியல் கொடுகளுக்கு புகார் தெரிவிக்கும் உதவி மையங்களின் எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதன் மூலம் புகார் தெரிவிப்பது தொடர்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும். இந்தத்திட்டத்தின் படி, நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகள் வாயிலாக, 26 கோடி மாணவர்கள் மற்றும் பெற்றோர் உதவி எண்களை அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.